கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வானிலை! சென்னைக்கு 5 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாள்களுக்கான மழை நிலவரம் பற்றி.

வானிலை நிலவரம்

வானிலை நிலவரம் - ENS

Published On :22 அக்டோபர் 2026, 3:51 pm IST

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழைக்கான வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில், இன்று குமரி, தென்காசி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக் கூடும் என்று எச்சரித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதுபோல, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று முதல் அடுத்த ஐந்து நாள்களுக்கும் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் ஐந்து நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக சென்னைக்கு 26ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று காலை முதல் வெய்யில் சற்று தலைகாட்டத் தொடங்கியதும் பலரும் துணிகளை வெளியில் உலர்த்தினர். ஆனால் திடீரென பகல் 2 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது.

தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை 8.30 மணியளவில் குமரிக் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் நிலவுவதால் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.