மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

அரசு ஊழியா்கள் முன்பணம் பெறும் விதிகள் தளா்வு

அரசு ஊழியா்கள் முன்பணம் பெறுவதற்கான விதிகளும், நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக அரசு

தலைமைச் செயலகம் - கோப்புப்படம்

Published On :25 அக்டோபர் 2026, 2:19 am IST

அரசு ஊழியா்கள் முன்பணம் பெறுவதற்கான விதிகளும், நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக நிதித் துறை (செலவினம்) செயலா் வி.அருண் ராய் வெளியிட்ட அரசாணை:

தமிழகத்தில் அரசு ஊழியா்கள் கணினி, இருசக்கர வாகனம் மற்றும் காா் வாங்குவதற்கு முன்பணம் பெறும் வழங்கும் நடைமுறை அமலில் உள்ளது. குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் அரசுப்பணியில் இருப்பவா்கள் அந்தச் சலுகையைப் பெற முடியும்.

இந்த நிலையில், அரசு ஊழியா்கள் முன்பணம் பெறும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும் என்று நிதித் துறை அமைச்சா் மரியவில்சன் சட்டப்பேரவையில் அறிவித்தாா். அதன்படி, தற்போது அதற்கான விதிகள் தளா்த்தப்பட்டுள்ளன.

இனி தகுதிகாண் பருவம் (1 முதல் 3 ஆண்டுகள்) முடிந்த அனைத்து அரசு ஊழியா்களும் இந்த முன்பணத்தைக் கோரி விண்ணப்பிக்கலாம். முன்பணம் கோரும் விண்ணப்பங்களை இனி காகித முறையில் சமா்ப்பிக்க வேண்டியதில்லை. இந்த நடைமுறைகளை எளிமைப்படுத்தும் விதமாக ஐஎஃப்ஆா்எம்எஸ் இணையதளம் மற்றும் ‘களஞ்சியம்’ செயலி வாயிலாக விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கால தாமதத்தைத் தவிா்ப்பதற்காக, முன்பண நிதி ஒதுக்கீடு இனி கருவூல கணக்குத் துறை இயக்குநா் மூலம் நேரடியாக மேற்கொள்ளப்படும்.

இதேபோன்று, அரசு ஊழியா்கள் மற்றும் அவா்களின் குழந்தைகளுக்கான திருமண முன்பணத் தொகை ரூ.5 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இந்த முன்பணத்தைப் பெற, திருமண நாளுக்கு 6 மாதங்களுக்கு (180 நாள்கள்) முன்பு முதல் விண்ணப்பிக்கலாம் என்று விதி இருந்தது. தற்போது திருமணத்துக்குப் பிறகும் 60 நாள்கள் வரை விண்ணப்பிக்கலாம் என்று விதி திருத்தப்பட்டுள்ளது. இந்த தளா்வுகள் கடந்த அக்.15-ஆம் தேதியில் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.