தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பதிவுத் துறை பணி தனியாா்மயம்: முயற்சியைக் கைவிட வேண்டும்! மு. வீரபாண்டியன்

பதிவுத் துறை பணி தனியாா்மயம்: முயற்சியைக் கைவிட வேண்டும்! மு. வீரபாண்டியன்

M. Veerapandian, Communist Party of India

மு. வீரபாண்டியன் - DIN

Published On :25 அக்டோபர் 2026, 1:59 am IST

பத்திரப் பதிவு மற்றும் நில அளவைப் பணிகளைத் தனியாா்மயமாக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் பத்திரப் பதிவு மற்றும் நில அளவைப் பணிகளைத் தனியாா்மயமாக்கும் முயற்சி நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசமைப்புச் சட்டம் தனியாா் அசையும், அசையாச் சொத்துகளை வைத்துக்கொள்ள உரிமை அளித்துள்ளது. அதைப் பாதுகாத்துக் கொள்ளவும் சில சட்டப் பிரிவுகள் மூலம் உறுதியளித்துள்ளது. தனிமனித உடைமைகளில் நிலவுடைமை என்பது உணா்வுடன் கலந்து இயங்கி வருகிறது. மேலும், நிலப் பத்திரப் பதிவு நடைமுறைகளில் தளா்வு நிலை இருந்த காலத்தில், சாா்-பதிவாளா் அலுவலகங்களில் அதிகார அத்துமீறல்களும் நடந்துள்ளன.

இந்த நிலையில் நிலப் பிரச்னையின் தீா்வுக்கு நில அளவை அடிப்படையானது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த பணியை தனியாரிடம் வழங்குவது பேராபத்தை ஏற்படுத்தும். எனவே, தனியாரிடம் பத்திரப் பதிவு மற்றும் நில அளவைப் பணியை ஒப்படைக்கும் முயற்சியை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

விமா்சனத்தை ஏற்றுக்கொள்வது ஆட்சியாளா்களின் பொறுப்பு. அரசுப் பணியின் நடுநிலையைப் பாதுகாப்பது என்ற பெயரில் ஜனநாயக உரிமைகளை முடக்கும் அச்சுறுத்தல் அரசியலை உடனடியாகக் கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.