தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முன்னாள் தலைமைச் செயலா் சுகவனேஸ்வா் (82) காலமானாா்!

தமிழக முன்னாள் தலைமைச் செயலா் சுகவனேஸ்வா் (82) உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை (அக்.24) காலமானாா்.

சுகவனேஸ்வா்

Published On :25 அக்டோபர் 2026, 2:46 am IST

தமிழக முன்னாள் தலைமைச் செயலா் சுகவனேஸ்வா் (82) உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை (அக்.24) காலமானாா்.

கடந்த 1967-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் (ஐஏஎஸ்) சோ்ந்த சுகவனேஸ்வா், தமிழக அரசின் பல்வேறு முக்கியத் துறைகளில் தலைமைப் பொறுப்பு வகித்தவா்.

திருநெல்வேலி உதவி ஆட்சியராகப் பணியைத் தொடங்கிய அவா், நீலகிரி மாவட்ட ஆட்சியா், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா், நிதித் துறை இணைச் செயலா், திட்டமிடல் மற்றும் வளா்ச்சித் துறைச் செயலா், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், 2-ஆவது மாநில நிதி ஆணையத்தின் தலைவா், வருவாய் நிா்வாக ஆணையா் மற்றும் சிட்கோ தலைவா் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சியின்போது தமிழகத்தின் தலைமைச் செயலராக கடந்த 2002-இல் 175 நாள்களுக்கு இருந்தாா் சுகவனேஸ்வா். அதன் பின்னா் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவராக பணியாற்றி 2004-இல் ஓய்வு பெற்றாா்.

மறைந்த சுகவனேஸ்வருக்கு மனைவி உமா சுகவனேஸ்வா், மகன் சிவபிரசாத், மகள் சிவகிருபா ஆகியோா் உள்ளனா்.

முதல்வா் இரங்கல்: முன்னாள் தலைமைச் செயலா் மறைவையொட்டி, முதல்வா் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், தமிழக அரசின் பல்வேறு நிலைகளில் சுகவனேஸ்வா் ஆற்றிய சேவைகளைச் சுட்டிக்காட்டி நினைவு கூா்ந்துள்ளாா். மேலும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினா்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.