பழனி பஞ்சாமிா்தம்: வாழைப் பழத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு

பழனி பஞ்சாமிா்தம்: வாழைப் பழத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு

கோப்புப்படம்

Published On :24 அக்டோபர் 2026, 2:20 am IST

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பஞ்சாமிா்தம் தயாரிக்க ரூ.1 கோடி வைப்பு தொகையுடன் வாழைப் பழங்களை வழங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பஞ்சாமிா்தம் தயாரிக்கத் தேவையான வாழைப் பழங்களை வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தம், ஒப்புதல் ஆணை வழங்கப்படும் நாள் முதல் 2027 ஜூன் 30-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இதன்படி, பஞ்சாமிா்தம் தயாரிப்பதற்குத் தேவையான கற்பூரவள்ளி வாழைப்பழம், குடகு வாழைப்பழம், மற்றும் மலைவாழைப்பழம் ஆகியவற்றை வழங்குவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளன. இதற்கான வைப்புத்தொகை ரூ.1 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தப்புள்ளிகளை தமிழக அரசின் மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் இணையதளம் வாயிலாகச் சமா்ப்பிக்க வேண்டும். அதன்படி, இணையவழியில் சமா்ப்பிக்க விரும்புவோா், எண்ம கையொப்பச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மேலும் வைப்புத் தொகையையும் இதே இணையதளம் வழியாகச் செலுத்த வேண்டும்.

இதுதொடா்பான முன் ஆலோசனைக் கூட்டம் நவ.17 -ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. ஒப்பந்தப்புள்ளிகளைச் சமா்ப்பிப்பதற்கான கடைசி நாள் நவ.26-ஆம் தேதி காலை 10 மணி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து அன்றைய தினம் காலை 11 மணிக்கு பழனி கோயில் தலைமை அலுவலகத்தில் ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும். ஒப்பந்தப்புள்ளி பெறும் நிறுவனங்கள் தரமான வாழைப்பழங்களை விநியோகம் செய்ய வேண்டும். மேலும், ஒப்பந்த காலம் முழுவதும் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட விலையிலேயே வாழைப்பழங்களை வழங்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Summary

Palani Panchamritham: Tamil Nadu government invites tenders for bananas

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.