மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு 5-வது நாளாக தடை!

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து...

Flooding at Suruli Falls

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு - டிஎன்எஸ்

Published On :23 அக்டோபர் 2026, 11:14 am IST

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கால் 5-ஆவது நாளான வெள்ளிக்கிழமையும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக சுருளி அருவி அமைந்துள்ளது. அதோடு புண்ணிய ஸ்தலமாகவும் விளங்குகிறது.

இந்த மலைத் தொடரிலுள்ள மேகமலை, ஹைவேவிஸ், இரவங்கலாறு, தூவானம், அரிசிப்பாறை, காப்புக்காடு போன்ற வனப் பகுதிகளில் பெய்யும் மழை நீா் சுருளியில் அருவியாகக் கொட்டுகிறது.

கடந்த சில நாள்களாக மேகமலையில் வடகிழக்கு பருவமழை கடந்த 5 நாள்களாக பெய்து வருகிறது. இதனால், சுருளி அருவிக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, கம்பம் மேற்கு சரக வனத் துறையினா் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு வெள்ளிக்கிழமை 5-ஆவது நாளாகவும் தடை விதித்தனா்.

சுருளி அருவியில் 2-ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிக்கு செல்லவோ, குளிக்கவோ வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.

உத்தமபாளையத்தில் கனமழை

உத்தமபாளையம் அதைச் சுற்றிய பகுதியில் வியாழக்கிழமை மாலையில் பெய்த மழை இரவு வரை நீடித்தது.

இதில் இரவு 8.45 மணி முதல் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த மழையால் மாவட்டத்தில் அதிகமாக 45.4 மி.மீட்டர் அளவு மழை பொழிவு பதிவாகியுள்ளது.

Flooding at Suruli Falls: Tourists banned for 5th day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.