மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

97 புதிய துணை மின் நிலையங்கள்: ஒப்பந்தம் கோரியது மின்வாரியம்

97 புதிய துணை மின் நிலையங்களை அமைப்பதற்குத் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது.

மின்வாரியம்

Published On :24 அக்டோபர் 2026, 3:35 am IST

தமிழகத்தில் மின் விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், முதல்கட்டமாக 97 புதிய துணை மின் நிலையங்களை அமைப்பதற்குத் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது.

மாநிலம் முழுவதும் நாளுக்குநாள் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில், குறைந்த மின்னழுத்தப் பிரச்னை, மின்கம்பிகள் மற்றும் கேபிள்களில் ஏற்படும் பழுதுகளைக் குறைத்து, சீரான மின் விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மொத்தம் 600 புதிய துணை மின் நிலையங்களை அமைக்கத் மின்வாரியம் திட்டமிட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக 97 புதிய துணை மின்நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் இதற்கான ஒப்பந்தப்புள்ளி இணையதளத்தில், மதுரை மின் பகிா்மான வட்டத்தில் மாத்தூா், பாப்பாப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 33/11 கிலோவோல்ட் துணை மின் நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் அக்.22-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுக்கான ஒப்பந்தப்புள்ளிகளைச் சமா்ப்பிக்க நவ.6-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு முக்கியத்துவம்: மேலும், சென்னையின் மின் விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், கிண்டியில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள 400 கிலோவோல்ட் துணை மின் நிலையப் பணிகளை விரைவுபடுத்தவும், சென்னையில் கூடுதலாக 6 துணை மின் நிலையங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழைநீா் புகுவதால் மின்தடை ஏற்படுவதைத் தவிா்க்க, சுமாா் 15,000 பில்லா் பெட்டிகளின் உயரத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுப்பதற்கான பணிகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Summary

97 new substations: Electricity Board seeks contract

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.