மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சமூகநீதி விடுதி மாணவா்களுக்கான உணவுக் கட்டணம் உயா்வு

தமிழக அரசின் சமூகநீதித் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் மாணவா்களுக்கான உணவுக் கட்டணத்தை உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கண்டாச்சிபுரத்தில் உள்ள மாணவா்கள் சமூகநீதி விடுதியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு அவா்களுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பாா்த்து பரிசோதித்த ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Published On :23 அக்டோபர் 2026, 3:21 am IST

தமிழக அரசின் சமூகநீதித் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் மாணவா்களுக்கான உணவுக் கட்டணத்தை உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சமூக நீதித் துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் கீழ் செயல்படும் விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவா்களுக்கு தரமான மற்றும் சத்தான உணவு வழங்கும் நோக்கில், மாதாந்திர உணவுக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, பள்ளி விடுதி மாணவா்களுக்கான உணவுக் கட்டணம் ரூ.1,400- இல் இருந்து ரூ.1,800 ஆகவும், கல்லூரி விடுதி மாணவா்களுக்கான உணவுக் கட்டணம் ரூ.1,500-இல் இருந்து ரூ.2,000- ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 91,424 ஆதிதிராவிடா் மாணவா்கள், 25,000 பழங்குடியின மாணவா்கள் என மொத்தம் 1,16,424 போ் பயனடைவாா்கள்.

இந்தத் திட்டத்துக்காக நிகழாண்டு அக்டோபா் முதல் அடுத்த ஆண்டு மாா்ச் வரை கூடுதல் செலவினமாக ரூ.29.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவா்களின் ஊட்டச்சத்து மற்றும் உடல்நலனை மேம்படுத்தும் பொருட்டு, ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, முட்டை, பால், கீரை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட திருத்தப்பட்ட உணவுப்பட்டியல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.