மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மழைநீர் வடிகால் பணிகள்! திமுக செய்யாததை 3 மாதத்தில் தவெக அரசு செய்கிறது- செங்கோட்டையன்

மழைநீர் வடிகால் பணிகளை, கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக செய்யாததை 3 மாதத்தில் தவெக அரசு செய்கிறது என செங்கோட்டையன் பேச்சு

அமைச்சர் செங்கோட்டையன்.

Published On :21 அக்டோபர் 2026, 1:38 pm IST

கடந்த ஐந்தாண்டுகளில் திமுக ஆட்சியின்போது பணிகள் முடிக்கப்படவில்லை, ஆனால், மூன்று மாதங்களில் தமிழக வெற்றிக்கழக அரசுதான் மழை நீர் வடிகால் பணிகளை விரைவாக முடித்து வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ஒவ்வொரு துறையையும் ஆய்வு செய்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வரின் அறிவுறுத்தலின்படி செய்து வருகிறோம்.

மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள், பட்டா போன்றவற்றை விரைவாக கொடுப்பதற்கு அறிவுறுத்தி உள்ளோம்

20 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு பட்டாக்கள் வழங்கப்பட வேண்டும், அந்தப் பணிகளை விரைந்து செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நவம்பர் மாதத்திற்குள் பெரும்பாலான பட்டாக்கள் வழங்க நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது.

முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு ரேகை சரியாக பதியவில்லை என்று குறைபாடு உள்ளது. அதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு மூன்று மாத காலமாக என்ன பணிகளை நிறைவேற்ற வேண்டுமோ அதனை செய்து கொண்டிருக்கிறோம்.

சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரை 15 மண்டலங்களாக பிரித்து 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 7 அமைச்சர்கள் குழுவை அமைத்து குழுவின் மூலமாக முதலமைச்சர் ஆய்வு பணிகளை என்ன நடைபெற்று இருக்கிறது என்பதை ஆய்வு செய்கிறோம்.

இயற்கை பாதித்த போது அதனை பாதுகாப்பது கடமை. ஐந்தாண்டு திமுக காலத்தில் பணிகள் முடிக்கப்படவில்லை, மூன்று மாதங்களில் தமிழக வெற்றிக்கழக அரசுதான் மழை நீர் வடிகால்பணிகளை விரைவாக முடித்து வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.