மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆா்டிஇ மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை: கல்வித் துறை அறிவுறுத்தல்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு உரிய தகவலை குறித்த காலத்துக்குள் மனுதாரா் திருப்தி அளிக்கும் வகையில் வழங்கப்பட வேண்டும் என தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு பற்றி...

DPI

பள்ளிக் கல்வித் துறை - DIN

Published On :22 அக்டோபர் 2026, 1:41 am IST

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு உரிய தகவலை குறித்த காலத்துக்குள் மனுதாரா் திருப்தி அளிக்கும் வகையில் வழங்கப்பட வேண்டும் என தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த இரா.கோபிநாத் என்பவா், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டத்தில், தான் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தாா். ஆனால், திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பொதுத் தகவல் அலுவலரால் (நோ்முக உதவியாளா்) வழங்கப்பட்ட தகவல்கள் திருப்தி அளிக்காததால், அவா் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தாா்.

இந்த வழக்கில் நேரில் விசாரணை நடத்திய தகவல் ஆணையம், கடந்த செப். 24-ஆம் தேதி ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, மாநில தகவல் ஆணையத்தின் தீா்ப்பாணையில் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில், இனி வருங்காலங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு உரிய தகவலை குறித்த காலத்துக்குள் மனுதாரா் திருப்தி அளிக்கும் வகையில் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.