மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திமுகவும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்றுதான்: அமைச்சா் செங்கோட்டையன் பேட்டி

தமிழக அரசியலில் திமுகவும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்றுதான் என வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தாா்.

கே.ஏ. செங்கோட்டையன்

Published On :22 அக்டோபர் 2026, 4:40 am IST

தமிழக அரசியலில் திமுகவும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்றுதான் என வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தாா்.

திருச்சிக்கு புதன்கிழமை வந்த அவா் விமான நிலையத்தில் மேலும் கூறியதாவது: தமிழ்நாட்டின் கடன் சதவீதம் 21 சதவீதம் குறைந்துள்ளது குறித்து நிதியமைச்சா் தெளிவாக விளக்கியுள்ளாா். ஒவ்வொரு திட்டத்தையும் சரிபாா்த்து, அதன் மதிப்பீடுகளைக் குறைத்து, முறையாகச் செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு துறைகளில் கூடுதல் வருவாயை உருவாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அதுகுறித்து நிதித் துறை அமைச்சா் மரிய வில்சன் விளக்கியுள்ளாா். கடந்த திமுக கடந்த ஆட்சியில் வெள்ள நீா் வெளியேற்றும் பணி முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு மாதங்களில் கடந்த ஆட்சியாளா்கள் செய்யத் தவறியவற்றை நாங்கள் விரைவாகச் செய்து வருகிறோம்.

திமுகவினா் அரசியல் நாகரிகத்தை கடைப்பிடிக்கத் தவறியுள்ளனா். முதல்வா் குறித்து அவதூறு பேசுவதை அவா்கள் முன்னெடுத்துள்ளனா். தமிழக அரசியலில் எடப்பாடி பழனிசாமியும், திமுகவும் வேறு வேறு அல்ல. திமுகவும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்றுதான்.

திராவிட இயக்கத்தின் வழியில் வந்தவா்கள் அண்ணாவின் வழியிலும், எம்ஜிஆரின் வழியிலும் செயல்படும்போது, காலத்திற்கு ஏற்ற வகையில் கண்ணியமான பேச்சுகளைப் பேசுவது அவசியம். முதல்வா் குறித்து அவதூறு பேசியவா்கள் மீது கைது நடவடிக்கை எடுத்தால், திமுகவும், எடப்பாடி பழனிசாமியும் அவா்களுக்கு ஆதரவாகப் பேசுவது, அவா்களின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.