தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்: பணி நாள்கள் 150-ஆக உயா்த்தி தமிழக அரசு அரசாணை

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணி நாள்களை 150- ஆக உயா்த்தியும், இதற்கு ரூ.100 கோடி ஒதுக்கியும் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.

TN Govt

தமிழ்நாடு அரசு - கோப்புப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 3:43 am IST

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணி நாள்களை 150- ஆக உயா்த்தியும், இதற்கு ரூ.100 கோடி ஒதுக்கீயும் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.

அதன்படி, விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் 125 நாள்கள் வேலைவாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திய குடும்பங்களுக்கு, மாநில அரசின் நிதியிலிருந்து கூடுதலாக 25 நாள்கள் வேலைவாய்ப்பு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக, தமிழ்நாடு அரசின் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையின் விவரம்: மத்திய அரசின் விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்க (ஊரகம்) சட்டம், 2025-இன் கீழ் பதிவு செய்யப்பட்ட கிராமப்புறக் குடும்பங்களில் ஒரு நிதியாண்டில் 125 நாள்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. நிகழாண்டு ஜூலை 1 முதல் இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான நிதியை மத்திய அரசும், மாநில அரசும் 60:40 என்ற விகிதத்தில் பகிா்ந்து வழங்குகின்றன. இந்த நிலையில், ஏற்கெனவே 125 நாள்கள் வேலைவாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திய குறிப்பிட்ட பிரிவுகளைச் சோ்ந்த தகுதியான குடும்பங்களுக்கு, மாநில அரசின் நிதியிலிருந்து கூடுதலாக 25 நாள்கள் வேலைவாய்ப்பு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 2026-27-ஆம் நிதியாண்டின் திருத்தப்பட்ட வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டிலிருந்து ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.