ஆயுத பூஜைக்கு பெரியார் அறிவுலகத்திற்கே லீவு விட்ட அறிவார்ந்த தவெக ஆட்சி! டிஆர்பி ராஜா விமர்சனம்

கோவை பெரியார் அறிவுலகத்திற்கு விடுமுறை விடப்பட்டிருப்பதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது பற்றி...

DMK condemns Coimbatore Periyar Aruvulagam for giving leave

பெரியார் அறிவுலகத்திற்கு விடுமுறை... - TRB Raaja

Published On :20 அக்டோபர் 2026, 3:20 pm IST

கோவையில் சமீபத்தில் திறக்கப்பட்ட பிரம்மாண்டமான பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு நேற்றும் இன்றும் (அக். 19, 20) விடுமுறை விடப்பட்டிருப்பது குறித்து திமுக விமர்சித்து வருகிறது.

திமுக முன்னாள் அமைச்சரும் திமுக ஐடி விங் செயலாளருமான டிஆர்பி ராஜா இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில்.

"ஆயுத பூசைக்கு பெரியார் அறிவுலகத்திற்கே ‘லீவு விட்ட’ அறிவார்ந்த ஆட்சி இன்றைய தவெக ஆட்சி!

பேஷ்! பேஷ்! ஆனால், அறிவாலயத்துக் கலைஞர் திறந்து வைத்த அண்ணா நூற்றாண்டு நூலகம் இன்றும் திறந்திருக்கிறது!

அது சரி அறிவுக்கு விடுமுறை விட்டிருக்கும் ஆட்சியில் இது அதிசயம் அல்லவே!" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில், "திமுக ஆட்சியில் கட்டப்பட்டு, இன்றைய தவெக ஆட்சியால் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பெரியார் அறிவுலகத்தின் கதவுகள் இன்று மூடப்பட்டிருக்கும் நிலையில்…

திமுக ஆட்சியில் கட்டப்பட்டு, கலைஞர் திறந்து வைத்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கதவுகள் இன்றும் (20.10.2026) திறந்திருக்கின்றன!

கலைஞரின் இல்லக் கதவுகளைப் போலவே… என்றும் மக்களுக்காக!

அறிவாலயத்துத் தலைவர் அல்லவா!" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், விடுமுறை நாள்களில்தான் மாணவர்களும் பெற்றோர்களும் அதிக அளவில் நூலகங்களுக்கும் அறிவியல் மையங்களுக்கும் வருவார்கள் என்ற அடிப்படைப் புரிதல்கூட இந்த தவெக அரசுக்கு இல்லையா? என்று திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.

Summary

DMK condemns Coimbatore Periyar Aruvulagam for giving leave

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.