விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் கூடாது! தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

நேரடியாகவோ, இணைய வழியிலோ சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது, விதிமீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

school

கோப்புப் படம்

Published On :19 அக்டோபர் 2026, 1:15 pm IST

அரசு பொது விடுமுறை மற்றும் அரசு அறிவிக்கும் விடுமுறை நாள்களில் மாணவர்களுக்கு எந்த வகுப்புகளும் நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறுவுறுத்தியுள்ளது.

நேரடியாகவோ, இணைய வழியிலோ சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது, விதிமீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குநரகம் மீண்டும் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து வகை தனியார் சுயநிதி பள்ளிகளிலும்  (மெட்ரிக் / சிபிஎஸ்இ / ஐசிஎஸ்இ / நர்சரி / மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள்) ஏற்கனவே தெரிவித்துள்ளவாறு அரசு பொது விடுமுறை நாள்கள் / அரசால் அறிவிக்கப்படும் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எவ்வித வகுப்புகள்/ சிறப்பு வகுப்புகளும் நேரடியாகவோ, இணையவழி மூலமாகவோ நடத்தக்கூடாது என இவ்வியக்ககம் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்) மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Special classes should not be held during holidays! Instructions to private schools

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.