தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைகிறதா?

பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படுவது குறித்து...

தலைமைச் செயலகம் - கோப்புப் படம்

Published On :20 அக்டோபர் 2026, 6:01 am IST

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலகம் சென்னை பல்லவன் இல்லத்தில் அமைக்கப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலகம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ. 1,200 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கட்டப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். முன்னதாக, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என அரசாணை வெளியான நிலையில், அப்பகுதியினரும் மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், பட்டினப்பாக்கத்தில் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க திட்டமிடப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது மாநகரப் போக்குவரத்துக் கழகம் செயல்பட்டு வரும் பல்லவன் இல்லம், 13.22 ஏக்கர் பரப்பளவு கொண்டது. புதிய தலைமைச் செயலகத்துக்கான போதுமான இடமாக இருப்பதால், கூடுதலாகக் கையகப்படுத்தும் தேவை இருக்காது. மேலும், பல்லவன் இல்லத்துக்கு பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் சேவைகளும் இருப்பதால் ஊழியர்களுக்கு எளிதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, தற்போது இங்கு செயல்பட்டு வரும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை சென்னை புறநகர் பேருந்து நிலையத்துக்கு (கோயம்பேடு) மாற்றப்படலாம்.

இருப்பினும், பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து பரிசீலனை மட்டுமே இருப்பதாகவும், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

Summary

Is a new secretariat being set up at Pallavan House?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.