மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்!

பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத்தை எதிர்த்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது பற்றி...

Chennai High Court

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :5 அக்டோபர் 2026, 12:02 pm IST

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு திங்கள்கிழமை திரும்பப் பெறப்பட்டது.

சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதல்வர் ச. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து சென்னையைச் சுற்றிலும் சில இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படும் என அறிவிப்பு வெளியாகி, அரசாணையும் வெளியிடப்பட்டிருந்தது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு எதிராக 9 மீனவ கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தீா்மானம் நிறைவேற்றி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், தமிழ்நாடு அரசு நிதி நெருக்கடியில் இருப்பதாக தவெக அரசு தெரிவித்திருந்தது. இதனிடையே, புதிய தலைமைச் செயலகம் கட்டினால் பெருந்தொகை செலவாகும். மேலும், அப்பகுதி மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகையால், புதிய தலைமைச் செயலகம் கட்டும் முடிவை கைவிடுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுப் பணம் எப்படி வீணடிக்கபப்படுகிறது? புதிய தலைமைச் செயலகம் கட்டக் கூடாது என உத்தரவிட நீதிமன்றத்துக்கு எந்த சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை எதிர்த்து 2011ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. விளம்பரத்துக்காக பொதுநல வழக்குகள் தாக்கல் செய்வதைத் தடுக்க அபராதம் விதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுவைத் திரும்பப் பெறுவதாக தெரிவித்ததை தொடர்ந்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Summary

Case against the Pattinapakkam Secretariat withdrawn!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.