எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசு மரியாதையுடன் தேவா உடல் நல்லடக்கம்!

இசையமைப்பாளர் தேவா உடல், அரசு மரியாதையுடன் அவரின் சொந்த ஊரான சக்கரமல்லூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Music composer Deva's body buried

72 குண்டுகல் முழங்க அரசு மரியாதை, உள்படம்: தேவா உடலுக்கு இறுதிச்சடங்கு - எக்ஸ்

Published On :18 அக்டோபர் 2026, 5:28 pm IST

இசையமைப்பாளர் தேவா உடல் அரசு மரியாதையுடன் அவரின் சொந்த ஊரான சக்கரமல்லூரில் இன்று (அக். 18) நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கில் அமைச்சர் காந்திராஜ், ஆட்சியர் பிரியா, காவல் கண்காணிப்பாளர் சிபின் ஆகியோர் பங்கேற்று தமிழக அரசு சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தினர். நடிகர் ஜெய் மற்றும் இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் இருந்தனர்.

சென்னையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தேவா உடல், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகேவுள்ள சக்கரமல்லூருக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரின் இல்லத்தில் கிராம மக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து அவரின் இல்லம் அருகேவுள்ள இடத்தில் குடும்பத்தினர் இறுதிச் சடங்குகள் செய்து தேவாவின் உடலை நல்லடக்கம் செய்தனர்.

அரசு மரியாதை

சக்கரமல்லூரில் தமிழக அரசு சார்பில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தேவா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், தேனிசைத் தென்றல் என்று போற்றப்பட்டவருமான தேவா (75) உடல்நலக் குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை (அக். 17) காலமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தென்னிந்திய திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, சென்னையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

பிறகு தேவாவின் உடல் அவரது சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள சக்கரமநல்லூருக்கு சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட்டது.

சக்கரமல்லூரில் உள்ள தேவாவின் சொந்த வீட்டில் அவரின் உடல், கிராம மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அவருக்குச் சொந்தமான கிருஷ்ணவேனி தோட்டத்தில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் இறுதிச் சடங்குகள் செய்து அவரின் உடலை நல்லடக்கம் செய்தனர்.

Summary

Music composer Deva's body buried with state honors

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.