தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களுக்கு இசையமைத்த 90ஸ் ஃபேவரைட் தேவா!

1990களில் ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களுக்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்தது பற்றி...

Deva

இசையமைப்பாளர் தேவா - தினமணி

Published On :17 அக்டோபர் 2026, 5:46 pm IST

90களில் ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட முக்கிய நடிகர்களின் வெற்றிப் படங்களுக்கு தேவா இசையமைத்திருந்தார்.

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 75. கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவா மாரடைப்பால் காலமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இசையுலகில் மிகவும் பிரபலமான தேவாவின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

'மனசுக்கேத்த மகராசா' என்ற திரைப்படத்தின் மூலம், 1986 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருந்தாலும் 1990ல் வெளிவந்த பிரசாந்த் நடித்த 'வைகாசி பொறந்தாச்சு' படத்தின் மூலமாக பிரபலமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400 -க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் தேவா.

கானா பாடல்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி அவரது குரலில் கானா பாடல்கள் வெற்றிக்கொடி கட்டி பறந்தன. 90ஸ் கிட்ஸ்களுக்கு தேவா பாடல்கள்தான் பிரபலம்.

ரஜினி, கமல், அஜித், விஜய்.....

1990 களில் ரஜினி, கமல், அஜித், விஜய், விஜயகாந்த் என முக்கிய பிரபலங்களின் படங்களுக்கு இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளராக இருந்துள்ளார்.

ரஜினியின் மிகப்பெரும் வெற்றி 'மாஸ்' படங்களான பாட்ஷா, அண்ணாமலை, அருணாச்சலம் படங்களுக்கு இசையமைத்தவர். இந்த 3 படங்களிலும் அனைத்து பாடல்களும் ஹிட்தான். இந்த படங்களின் பின்னணி இசையும் இந்த படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. இதை ரஜினிகாந்தே ஒரு சில இடங்களில் சொல்லியிருக்கிறார். அண்ணாமலை, பாட்ஸா படங்களில் ரஜினி வரும்போது வரும் பிஜிஎம் இன்றும் மாஸ்தான். 90களில் இருந்து இன்று வரை பிரபலமாக இருக்கும் ரஜினியின் டைட்டில் கார்டுக்கு இசையமைத்தவர் தேவாதான்.

தேவா இசையில் வெளிவந்த கமல்ஹாசனின் அவ்வை சண்முகி படம் வெற்றிப் படமாக அமைந்தது. இதிலும் அனைத்து பாடல்களும் இன்றும் பேசப்படுபவை. இந்த படத்தில் பின்னணி இசையும் அபாரம்தான். பம்மல் கே சம்மந்தம், பஞ்சதந்திரம் படங்களுக்கும் தேவாதான் இசை.

நடிகர் விஜய்யின் 10-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் தேவா. ரசிகன், விஷ்ணு, மாண்புமிகு மாணவன், ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், ப்ரியமுடன், நினைத்தேன் வந்தாய், மின்சார கண்ணா, குஷி, பகவதி ஆகிய படங்கள். 'தொட்டபெட்டா ரோட்டு மேல', 'ஊட்டி மலை பியூட்டி, 'வண்ண நிலவே', மல்லிகையே மல்லிகையே, 'பாரதிக்கு கண்ணம்மா' மற்றும் 'குஷி', 'பகவதி', நினைத்தேன் வந்தாய், மின்சார கண்ணா படங்களில் பல வெற்றி பாடல்களைக் கொடுத்தவர்.

இதில் நேருக்கு நேர் படத்தில் விஜய், சூர்யா இணைந்து நடித்திருப்பார்கள். 'மனம் விரும்புதே உன்னை, அவள் வருவாளா, எங்கெங்கே எங்கெங்கே' பாடல்கள் இன்றும் ஹிட் சாங்ஸ்தான். மேடைகளில் பலரால் பாடப்பட்டு வைரலாக இருக்கும் பாடல்கள்.

அதேபோல அஜித்தின் வெற்றி படங்களான ஆசை, காதல் கோட்டை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், தொடரும், வாலி ஆகிய படங்களுக்கு இசை தேவா. 'கொஞ்ச நாள் பொறு தலைவா', 'மீனம்மா', 'புல்வெளி புல்வெளி', 'ஏப்ரல் மாதத்தில்', 'குன்றத்திலே கோவில் கட்டி' உள்ளிட்ட பாடல்கள் என்றும் நிலைத்திருக்கக் கூடியவை.

விஜயகாந்தின் செந்தூரபாண்டி, சொக்கத்தங்கம், எங்கள் அண்ணா, கள்ளழகர் ஆகிய பட பாடல்களுக்கும் தேவா இசையமைத்துள்ளார்.

விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி, சலோமியா, தஞ்சாவூர் மண்ணு எடுத்து.. என தேவாவின் ஹிட் பாடல்கள் ஏராளம்.

1990 - 2010களில் முக்கிய நடிகர்களின் படங்களில் எல்லாம் தேவா இசையும் அவரது குரலும் இருக்கும். அதேபோல 90களில் பிறந்தவர்களின் பிடித்த இசையமைப்பாளர் தேவா என்பதும் மறுப்பதற்கில்லை. இன்றும் அவரது கானா பாடல்களுக்காக அவரது இசை நிகழ்ச்சிகளுக்கு இளைஞர்கள் படையெடுக்கிறார்கள்.

தேவாவின் பல பாடல்கள் அவரது பாடல்கள் என்று தெரியாமலேயே கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மறைந்தாலும் இசையாலும் அவரது பாடல்களாலும் என்றும் தேவா நினைவுகூரப்படுவார்.

Summary

90s favorite Deva; composed music for films starring Rajini, Kamal, Ajith, and Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.