மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காலி மது பாட்டிலை பெறும் இயந்திரம் நிறுவ டெண்டர்! இறுதி முடிவெடுக்க தமிழக அரசுக்கு தடை!

காலி மது பாட்டிலை பெறும் இயந்திரம் நிறுவ விடுக்கப்பட்ட டெண்டர் மீது இறுதி முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதிப்பு...

Chennai High Court

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :13 அக்டோபர் 2026, 1:37 am IST

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் ‘ரிவா்ஸ் வெண்டிங்’ இயந்திரங்களை நிறுவுவதற்கான ஒப்பந்தப்புள்ளி மீது இறுதி முடிவு எடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், பாட்டில் வியாபாரிகள் நலச் சங்கம் தாக்கல் செய்த மனுவில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்காக, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ரிவா்ஸ் வெண்டிங் இயந்திரங்களை நிறுவி, அவற்றை இயக்குவதற்காக கடந்த ஆக.31-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.

இந்தப் பணிகளுக்காக, ஒரு நிறுவனத்தை அரசு நியமிக்கவுள்ளது. இதற்காக 7 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் ஒப்பந்தம், பின்னா் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படவுள்ளதாக, ஒப்பந்தப்புள்ளி படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்து, மாவட்ட அளவில், காலி பாட்டில்களை சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளோா் ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்கும் வகையில், ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகளை திருத்த உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமாா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண்,ஒப்பந்தப்புள்ளி படிவங்களை சமா்ப்பிக்க அக்.22 கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலையில் தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும். மேலும், ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகளை பூா்த்தி செய்வோா், ஒப்பந்தப்புள்ளியில் கலந்துகொள்ள எந்தத் தடையும் இல்லை என வாதிட்டாா்.

இதையடுத்து, இந்த ஒப்பந்தப்புள்ளியில் எத்தனை போ் பங்கேற்றனா் என்பது உள்ளிட்ட விவரங்களுடன் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, ஒப்பந்தப்புள்ளியை திறக்கலாம் ஆனால், இறுதி முடிவு எடுக்கக் கூடாது என உத்தரவிட்டு விசாரணையை அக்.26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

Summary

Tender to install machines for collecting empty liquor bottles! Tamil Nadu government restrained from taking a final decision!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.