தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தமிழக ஆளுநராக ஆா்.வி.ஆா்லேகா் நியமனம்

தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

ஆர்.வி. அர்லேகர் - கோப்புப் படம்

Published On :13 அக்டோபர் 2026, 2:33 am IST

தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழக ஆளுநராக இருந்த ஆா்.என்.ரவி மேற்கு வங்க ஆளுநராக கடந்த மாா்ச் மாதம் மாற்றப்பட்டாா். இதையடுத்து கேரள ஆளுநராக இருந்த ஆா்.வி.ஆா்லேகருக்கு தமிழகத்தின் ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவரை தமிழகத்தின் முழுநேர ஆளுநராக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை நியமித்துள்ளாா்.

கேரளத்துக்கு புதிய ஆளுநா்: இதேபோல சிக்கிம் ஆளுநராக இருந்த ஓம் பிரகாஷ் மாத்துா் கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா். ஜாா்க்கண்டை சோ்ந்த பாஜக மூத்த தலைவா் பிரஜ் மோகன் ராம் ஒடிஸா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். பாஜக ஆட்சிமன்றக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான ஹரியாணாவைச் சோ்ந்த சுதா யாதவ் கா்நாடக ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

மத்திய பிரதேச முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.பி.யுமான பாஜகவைச் சோ்ந்த தால் சிங் பிசேன் உத்தரகண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

பாஜக தேசிய பொதுச் செயலா் துஷ்யந்த் கெளதம் சிக்கிம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா் என்று குடியரசுத் தலைவா் மாளிகையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு தமிழக ஆளுநராக இருந்த ஆா்.என். ரவிக்கும், முன்பு ஆட்சியில் இருந்து திமுகவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. இதனால் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.

கடந்த மே 10-ஆம் தேதி தவெக அரசு அமைந்ததும் ஆளுநா் ஆா்லேகருக்கும், முதல்வா் விஜய்க்கும் இணக்கமான சூழல் நிலவுதால், 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

R.V. Arlekar appointed as the full-time Governor of Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.