தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கேரளத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்துர் பதவியேற்பு!

கேரளத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்துர் பதவியேற்றுக்கொண்டது குறித்து...

Om Prakash Mathur was sworn in as the 24th Governor of Keralam

கேரளத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்துர் பதவியேற்பு... - ENS

Published On :23 அக்டோபர் 2026, 5:31 pm IST

கேரளத்தின் 24 ஆவது ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்துர் இன்று (அக். 23) பதவியேற்றுக்கொண்டார்.

தமிழகம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமித்து கடந்த சில நாள்களுக்கு முன்பு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கேரளத்தின் ஆளுநராகப் பதவி வகித்து வந்த ராஜேந்திர ஆர்லேகர் தமிழகத்தின் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கேரளத்தின் 24 ஆவது ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்துருக்கு, கேரள உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சௌமென் சென் இன்று பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கேரள முதல்வர் வி.டி. சதீசன், கேரளத்தின் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரான ஓம் பிரகாஷ் மாத்துர், சிக்கிம் மாநிலத்தின் ஆளுநராகப் பதவி வகித்து வந்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் செயல்பட்டு வந்த அவர் பாஜகவின் குஜராத் மாநிலத்தின் பொறுப்பு பொதுச்செயலராகவும் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Om Prakash Mathur took oath as the 24th Governor of Kerala today (Oct. 23).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.