மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தாராபுரம்! 4 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் சத்யபாமா முன்னிலை!

தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்யபாமா 4000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

முதல்வர் விஜய்யுடன் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா.

முதல்வர் விஜய்யுடன் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா.

Published On :9 அக்டோபர் 2026, 12:07 pm IST

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், ஒன்பதாம் சுற்றில் தவெக வேட்பாளர் சத்யபாமா தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

தாராபுரம் இடைத்தேர்தல் 10 சுற்று

1. சத்தியபாமா (த.வெ.க.) - 27,649

2. பானுமதி (அதிமுக) - 23,521

3. சுகன்யா (திமுக) - 22,503

4. கார்த்திகா (நாம் தமிழர் கட்சி) - 2,156

5. லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) 509

வாக்கு வித்தியாசம் 4,128 வாக்குகள் த.வெ.க முன்னிலை

தாராபுரம் இடைதேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 9ஆவது சுற்றின் முடிவில் தவெக வேட்பாளர் சத்யபாமா 2112 வாக்குகள் வித்தியாசத்தில்  முன்னிலையில் இருந்த நிலையில், அடுத்த சுற்றில் வாக்கு வித்தியாசம் 4000 ஆக உயர்ந்துள்ளத.

2வது சுற்றிலிருந்து அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலையில் இருந்த நிலையில் ஐந்தாம் வாக்கு எண்ணிக்கையின்போது திடீரென நிலவரம் மாறியது.

இரண்டாம் சுற்று முதல் தவெக வேட்பாளர் சத்யபாமாவை பின்னுக்குத் தள்ளி அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலைக்கு வந்திருந்தார். நான்காம் சுற்று வரை இந்த நிலவரம் இருந்த நிலையில், ஐந்தாம் சுற்று நிலவரம் வெளியான போது மீண்டும் தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலைக்கு வந்துள்ளார்.

ஐந்தாம் சுற்றில், தவெக வேட்பாளர் சத்யபாமா - 13213 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பானுமதி 12,489 வாக்குகளும், திமுக வேட்பாளர் 11554 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு வெளியான போது சத்யபாமா முன்னிலையில் இருந்த நிலையில், ஐந்தாம் சுற்றிலிருந்து மீண்டும் தவெக முன்னிலைக்கு வந்துள்ளது.

11.50 மணி நிலவரப்படி தாராபுரத்தில் தவெக முன்னிலையில் உள்ளது. அதிமுக இரண்டாம் இடத்தில் உள்ளது.

இடைத்தேர்தலில் 1,79,337 வாக்குகள் அதாவது 80.30 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.