மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை நேரலை: வெற்றி யாருக்கு? தவெக முன்னிலை

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்து...

madhuranthagam by election

மரகதம் குமரவேல் | பரந்தாமன் | கணிதா சம்பத் | ஜானகிராமன்

Published On :9 அக்டோபர் 2026, 11:07 pm IST
7:37 am, 9 அக்டோபர் 2026

மதுராந்தகம் இடைத்தேர்தல்: வெற்றி யாருக்கு?

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சாா்பில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்ததால், இந்தத் தொகுதியில், கடந்த அக்.6-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சாா்பில் மரகதம் குமரவேல், திமுக சாா்பில் இ.பரந்தாமன், அதிமுக சாா்பில் கணிதா சம்பத், நாதக சாா்பில் ஜானகிராமன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் சுகந்தி உள்ளிட்ட வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

7:41 am, 9 அக்டோபர் 2026

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், செங்கல்பட்டு ஆத்தூரில் உள்ள சமூக மேம்பாட்டு ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் வைத்து எண்ணப்படுகிறது. தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 2 மேசைகளும், மின்னணு வாக்குகளுக்கு 14 மேசைகளும் அமைக்கப்பட்டு, 20 சுற்றுகளாக எண்ணிக்கை நடைபெறுகிறது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குகள் எண்ணப்படும்.

8:15 am, 9 அக்டோபர் 2026

தபால் வாக்குகளில் தவெக முன்னிலை!

தபால் வாக்கு எண்ணிக்கையில் தவெகவின் மரகதம் குமரவேல் 282 தபால் வாக்குகளும், திமுகவின் பரந்தாமன் 158 வாக்குகளும், அதிமுகவின் கணிதா சம்பத் 141 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 5 வாக்குகளும், சிபிஎம் ஒரு வாக்கும் பெற்றுள்ளனர்.

9:13 am, 9 அக்டோபர் 2026

தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலை

மின்னணு வாக்குகளும் எண்ணப்பட்டு வரும்நிலையில், (9 மணி நிலவரப்படி) இதிலும் மரகதம் குமரவேல் 3,571 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 2,611 வாக்குகளும், அதிமுகவின் கணிதா சம்பத் 2,078 வாக்குகளும் பெற்றுள்ளார்.

9:40 am, 9 அக்டோபர் 2026

தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் தொடர் முன்னிலை!

மின்னணு வாக்குகளும் எண்ணப்பட்டு வரும்நிலையில், (9.30 மணி நிலவரப்படி) மரகதம் குமரவேல் 7,398 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 6,006 வாக்குகளும், அதிமுகவின் கணிதா சம்பத் 4,301 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் ஜானகிராமன் 154 வாக்குகளும் பெற்றுள்ளார்.

11:18 am, 9 அக்டோபர் 2026

மதுராந்தகத்தை கைப்பற்றுகிறதா தவெக?

வாக்கு எண்ணிக்கை நான்காவது சுற்றில் 4,484 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 15,725 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 11,241 வாக்குகளும், அதிமுகவின் கணிதா சம்பத் 9,691 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

12:56 pm, 9 அக்டோபர் 2026

வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டதா? எதிர்க்கட்சிகள் புகார்

9 ஆவது சுற்றின்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டதாக அதிமுக முகவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, 11 ஆவது சுற்றுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் பலவற்றில் 'சீல்' இல்லை என திமுகவும் அதிமுகவும் புகார் கூறியுள்ளன.

1:00 pm, 9 அக்டோபர் 2026

7-ஆவது சுற்றில் 8,800 வாக்குகளுடன் தவெக முன்னிலை!

7 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையின்படி, தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 8,792 வாக்குகள் வித்தியாசத்துடன் 27,460 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 18,668 வாக்குகளும், அதிமுகவின் கணிதா சம்பத் 16,201 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

1:35 pm, 9 அக்டோபர் 2026

மதுராந்தகத்தில் தவெக முன்னிலை: விசிலடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.