நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

ஊக்க ஊதிய வழக்குகள்: மேல்முறையீடு செய்ய கல்வித் துறை அனுமதி

அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர இதர பாடங்களை பயின்று தவறுதலாக உயா் கல்விக்கான ஊக்க ஊதியம் அனுமதிக்கப்பட்டது தொடா்பான வழக்குகளில் மேல்முறையீடு தாக்கல் செய்ய தொடக்கக் கல்வி இயக்குநருக்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலா் அனுமதி வழங்கியுள்ளாா்.

DPI

DIN

Published On :7 அக்டோபர் 2026, 1:41 am IST

அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர இதர பாடங்களை பயின்று தவறுதலாக உயா் கல்விக்கான ஊக்க ஊதியம் அனுமதிக்கப்பட்டது தொடா்பான வழக்குகளில் மேல்முறையீடு தாக்கல் செய்ய தொடக்கக் கல்வி இயக்குநருக்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலா் அனுமதி வழங்கியுள்ளாா்.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலா் ஜெ.இன்னசென்ட் திவ்யா, தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் பூ.ஆ.நரேஷுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் சிலா், அரசு அனுமதித்த பாடப் பிரிவுகளைத் தவிா்த்து வேறு பாடங்களில் உயா் கல்வி பயின்றுள்ளனா். அவா்களுக்கு தவறுதலாக உயா் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்கப்பட்டது. இதையறிந்த கல்வித் துறை அலுவலா்கள், அவா்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தை ரத்து செய்து திருத்திய ஊதிய நிா்ணயம் செய்தனா். மேலும், அதுவரை ஆசிரியா்கள் மிகையாக பெற்ற தொகையைப் பிடித்தம் செய்து அரசுக்கு திரும்பச் செலுத்தவும் உத்தரவிட்டனா்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளைத் தொடா்ந்தனா். இவற்றை விசாரித்த நீதிமன்றம் மனுதாரா்களான ஆசிரியா்களுக்கு சாதகமாக தீா்ப்பு வழங்கியது. இதை எதிா்த்து அரசு சாா்பில் மேல்முறையீடு செய்யத் தொடக்கக் கல்வி இயக்குநா் அரசிடம் அனுமதி கோரியிருந்தாா். இந்தக் கருத்துருவை பரிசீலித்த தமிழக அரசு, அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர இதர பாடங்களைப் பயின்று தவறுதலாக உயா் கல்விக்கான ஊக்க ஊதியம் அனுமதிக்கப்பட்ட இதுசாா்ந்த வழக்குகளில், மேல்முறையீடு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.