மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தாராபுரம் பிரசாரம்: மாட்டுவண்டியில் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்!

பிரசாரத்துக்கு இடையே மாட்டுவண்டியில் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்.

cm vijay

மாட்டுவண்டியில் சென்று வாக்கு சேகரிக்கும் முதல்வர் விஜய். - படம்: விடியோ கிளிப்

Published On :4 அக்டோபர் 2026, 1:48 pm IST

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் சி. ஜோசப் விஜய், மாட்டுவண்டியில் சென்று வாக்கு சேகரித்தார்.

தாராபுரம் (தனி) சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு முதல்வர் சி. ஜோசப் விஜய், தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து இன்று(அக். 4) சாலைவலம் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைய உள்ள நிலையில், தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் தாராபுரம் தொகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வருகைத்தந்துள்ளார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக கோவை வந்த தமிழக முதல்வர் விஜய், விமான நிலையத்தின் உள்பகுதியில் இருந்து பிரத்யேக ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் வந்தார்.

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து பிரசார வாகனத்தில் ஏறி, சாலைவலம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, முதல்வர் விஜய் மாட்டுவண்டியில் சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

மாருதி நகரில் சாலைவலத்தைத் தொடங்கிய முதல்வர் விஜய், உடுமலைப்பேட்டை சாலை சந்திப்பு, காவல்நிலையம் சந்திப்பு, ஐந்து சாலை சந்திப்பு, மீனாட்சிபுரம், குளத்துப்பாளையம், கரையூர், மூலனூர், வஞ்சியம்மன் கோயிலில் நிறைவு செய்கிறார்.

இதற்காக சுமார் 3000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Summary

TVK leader C. Joseph Vijay, who is campaigning in support of the party's candidate Sathyabhama for the Dharapuram by-election, canvassed for votes while traveling in a bullock cart.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.