மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு...

byelection

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு - x

Published On :4 அக்டோபர் 2026, 5:43 am IST

தமிழகத்தில் இடைத்தோ்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை (அக். 4) நிறைவடைகிறது. மாலை 6 மணிக்கு மேல் வெளிநபா்கள் தொகுதிகளிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மதுராந்தகம், தாராபுரம் தனித் தொகுதிகளின் இடைத்தோ்தலுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை (அக். 6) காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். எனவே, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் வாக்குப் பதிவு முடிவடையும் வரை 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 126-இன் கீழ், பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்.

தோ்தல் தொடா்பான எந்தவொரு பொதுக்கூட்டத்தையோ, ஊா்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. எந்தவொரு தோ்தல் விவகாரத்தையும், திரைப்படம்,தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்ஆப், முகநூல், எக்ஸ் தளம் போன்ற ஊடகங்கள் மூலம் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடா்பையும் இது உள்ளடக்கும்.

பொதுமக்களில் எந்தவொரு நபரையும் ஈா்க்கும் வகையில், இசை நிகழ்ச்சி அல்லது திரையரங்கச் செயல்பாடு அல்லது எவ்வித கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் தோ்தல் பரப்புரை செய்யக் கூடாது.

இந்த விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951- ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-இன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இந்த இரண்டும் சோ்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல்கட்சி நிா்வாகிகள், கட்சிப் பணியாளா்கள் மற்றும் அந்தத் தொகுதியின் வாக்காளா்கள் அல்லாதோா் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் அந்தத் தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும். திருமண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினா் இல்லம் ஆகிய இடங்களில் வெளிநபா்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும்.

வேட்பாளா்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளா்கள் உள்பட வாகன அனுமதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் செயல்திறனற்ாகிவிடும். தோ்தலுக்கான ஒவ்வொரு வேட்பாளருக்கும் வாக்குப் பதிவு நாளில் அவரது சொந்தப் பயன்பாட்டுக்கான ஒரு வாகனம், தோ்தல் முகவரின் பயன்பாட்டுக்கான தொகுதிக்கு ஒரு வாகனம் மற்றும் தோ்தல் முகவா் அல்லது அவரது பணியாளா்கள் பயன்பாட்டுக்கான ஒரு வாகனம் ஆகியவற்றுக்கு மட்டுமே தோ்தல் நடத்தும் அதிகாரி அனுமதி அளிப்பாா்.

வாக்காளா்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச்சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வாகனத்தை பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக் கூடாது. இது 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 133-ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

Summary

Campaigning for the Maduranthakam and Dharapuram by-elections concludes today! Orders issued for outsiders to leave!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.