பாஜக ஆதரவோடு அதிமுக - திமுக சேர்ந்து ஆட்சியமைக்க மீண்டும் முயற்சி: அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு!
தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் நடைபெறுவதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு.

பாஜகவின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமியும் திமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என மீண்டும் முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது என்று மின்சார துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த மின்சார துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்ததாவது:
தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுவது குறித்து, ஏற்கெனவே அதிமுக, திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்., கரூரைச் சேர்ந்த நபரை கைது செய்திருக்கிறார்கள். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க ஒரு இடத்தில் மட்டுமல்ல; அனைத்து இடத்திலும் முயற்சி நடக்கிறது.
தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி பாஜகவின் பின்புலத்தோடு, பாஜகவின் ஆதரவோடு மீண்டும் எடப்பாடியும் திமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது
இடைத்தேர்தலில் திமுக - அதிமுக இருவரும் சேர்ந்து பொது வேட்பாளர் நிறுத்துவதாகதான் திட்டம். ஆனால், திமுகவுக்குள் கனிமொழி மற்றும் நேரு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் அது கைவிடப்பட்டது.
அடுத்து வரும் இடைத்தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவும் சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்தலாம் என முடிவு செய்திருக்கிறார்கள். அதிலும், உள்கட்சியில் எதிர்ப்பு கிளம்பினால் மட்டுமே தனியாக வேட்பாளர் நிறுத்தப்படலாம்.
திமுக, அதிமுக சேர்ந்து எப்படியாவது தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க வேண்டும் என்ற முயற்சி, வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாளிலிருந்தே தொடர்கிறது.
எங்களுக்கு விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் இல்லை, எதிலும் சமரசம் செய்ய வேண்டிய தேவையும் இல்லை.
ஆனால், திமுகவினர் தொடர்ந்து இந்த முயற்சியை செய்து கொண்டே இருக்கிறார்கள்” என்றார்.
Summary
Electricity Minister Nirmalkumar has stated that efforts are once again underway for Edappadi Palaniswami and the DMK to form a government together, with the support of the BJP.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





