தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 75 பேர் பணியிடைநீக்கம்!

கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடைகளை திறக்காமல் போராட்டம் நடத்திய 75 மேற்பார்வையாளர்கள் பணியிடைநீக்கம்.

tasmac

டாஸ்மாக் - பிரதிப் படம்

Published On :3 நவம்பர் 2026, 9:42 am IST

கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடைகளை திறக்காமல் போராட்டம் நடத்திய 75 மேற்பார்வையாளர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காலி மதுபாட்டில்களை திரும்புப் பெறும் திட்டத்தை ரத்துசெய்து, தனியார் முகமை அமைத்து பெற்றுக்கொள்ள வேண்டும், உயர் நீதிமன்ற உத்தரவின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து கூட்டுக்குழு சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் திங்கள்கிழமை 2 ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் காரணமாக ஒசூர் கோட்டத்தில் ஒசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி ஆகிய பகுதகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் காரணமாக ஒசூர் கோட்டத்தில் நாளொன்றுக்கு அரசுக்கு ரூ. 1.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் 110 கடைகளில் பணியாற்றும் 387 பேரில் முதல்கட்டமாக 75 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Summary

In Krishnagiri, 75 supervisors have been suspended for staging a protest by refusing to open TASMAC outlets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.