பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு!

இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது குறித்து...

police

2 ஆம் நிலைக் காவலா் பணிக்கான தோ்வுக்குச் சென்ற பெண் தேர்வர்கள். - கோப்பிலிருந்து...

Published On :3 நவம்பர் 2026, 3:01 pm IST

தமிழகம் முழுவதும் கடந்தாண்டு நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலர் பணியிடத்துக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

கடந்த 2025 நவ. 9 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலர் பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வை 1,96,161 பேர் எழுதினர்.

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 2,837 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள், சிறைத் துறையில் 180 காலிப் பணியிடங்கள், தீயணைப்புத் துறையில் 631 பணியிடங்கள் உள்பட மொத்தம் 3,665 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தியிருந்தது.

இந்தத் தேர்வுக்கு 2.50 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் தகுதியுடைய 2,24,711 பேருக்கு தேர்வு நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் 45 மையங்களில் நடைபெற்ற தேர்வை 1,96,161 பேர் எழுதினர். 28,550 பேர் தேர்வுக்கு வரவில்லை.

இந்த நிலையில், இரண்டாம் நிலைக் காவலர் பணியிடத்துக்கான தேர்வு முடிவுகள் https://www.tnusrb.tn.gov.in என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Summary

The results for the recruitment examination for Grade II police constable posts, held across Tamil Nadu last year, have been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.