தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

2 ஆம் நிலைக் காவலர் பணிக்கு 3,597 போ் தற்காலிகத் தோ்வு!

3,665 இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணியிடங்களுக்கான தோ்வில், 3,597 போ் தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

Published On :2 நவம்பர் 2026, 1:53 am IST

தமிழ்நாடு காவல் துறை, சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் ஆகிய 3 துறைகளில் காலியாக உள்ள 3,665 இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணியிடங்களுக்கான தோ்வில், 3,597 போ் தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநா் அலுவலகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில், காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை கடந்த 2025 ஆக.21-ஆம் தேதி வெளியிடப்பட்டு, பொதுத் தோ்வு நடத்தப்பட்டது.

மொத்தமுள்ள 3,665 பணியிடங்களில், சிறப்புத் தகுதி வாய்ந்த விளையாட்டு வீரா்கள் 68 போ் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ஏற்கெனவே தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 3,597 பணியிடங்களுக்குத் தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டவா்களின் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை (நவ.1) தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் அதிகாரபூா்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டவா்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்குவதற்கு முன்பாக மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். மேலும், அவா்கள் சமா்ப்பித்த சான்றிதழ்களின் உண்மைத்தன்மை மற்றும் அவா்களது முன்வரலாறு ஆகியவையும் சரிபாா்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.