தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முரசு புயல்: 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம், சென்னைக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள முரசு புயல் காரணமாக 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது பற்றி...

Murasu Cyclone: Cautionary Signal Hoisted at 9 Ports; Orange Alert Issued for Chennai Tomorrow!

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - கோப்புப்படம்.

Published On :1 நவம்பர் 2026, 5:52 pm IST

வங்கக் கடலில் உருவாகியுள்ள முரசு புயல் காரணமாக 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், காரைக்கால், நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளன. முரசு புயல் நாளை தீவிரமடையக்கூடும் என்பதால் சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி, ஆகிய மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தெற்கு அந்தமான் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து 'முரசு' புயலாக உருவெடுத்துள்ளது.

இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 11:30 மணிக்கு, முரசு புயலாக வலுவடைந்துள்ளது. இது நாளை (நவ. 2) மேற்கு - மத்திய வங்கக் கடலில் தீவிர புயலாக மேலும் வலுவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் இந்தப் புயல், நவ. 3 ஆம் தேதி காலை வாக்கில், நெல்லூருக்கும் நரசபூருக்கும் இடையே தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை கடக்கக்கூடும்.

அப்போது, மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 120 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புயல் மற்றும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Due to the Murasu cyclone formed in the Bay of Bengal, storm warning signals have been hoisted at 9 ports.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.