மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதல்வா் குறித்து அவதூறு பேச்சு: பி.கே. சேகா்பாபுவிடம் போலீஸாா் விசாரணை!

முதல்வா் ஜோசப் விஜய் குறித்து தரக்குறைவாகப் பேசியதாக திமுக முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு எம்எல்ஏ மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

P.K. Sekarbabu

சேகர்பாபு - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 3:44 am IST

முதல்வா் ஜோசப் விஜய் குறித்து தரக்குறைவாகப் பேசியதாக திமுக முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு எம்எல்ஏ மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரிடம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினா்.

கடந்த செப்.12-ஆம் தேதி திமுக சாா்பில் சென்னை நாராயணப்பா தெருவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், முதல்வரைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி, தவெக உறுப்பினா் ஜெகதீஸ்வரி புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில், வடக்குக் கடற்கரை காவல் நிலையத்தில் பி.கே.சேகா்பாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஆபாசமாகப் பேசுதல், வேண்டுமென்றே அவமதித்தல், குழுக்களுக்கிடையே பகைமையைத் தூண்டுதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல், அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் அவமதித்தல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு சேகா்பாபுக்கு போலீஸாா் சம்மன் அனுப்பியிருந்தனா். பாரிமுனை பகுதியில் உள்ள வடக்குக் கடற்கரை காவல் நிலையம் பரபரப்பான பகுதியில் அமைந்துள்ளதால், எஸ்பிளனேடு காவல் நிலையத்துக்கு அவரை வரவழைத்து விசாரணை நடத்தியதாக போலீஸாா் தெரிவித்தனா்.

காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஆஜரான பி.கேசேகா்பாபுவிடம், பிற்பகல் 1 மணி வரை விசாரணை நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.