மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரூ.1,000 கோடி வருவாயை விட்டுவிட்டு மக்களுக்காக வந்திருக்கிறார்: ஜேசிடி பிரபாகர்

மக்களுக்காக ரூ. 1,000 கோடிக்குமேல் வருவாய் கிடைக்கிற தொழிலை விட்டுவிட்டு முதல்வர் வந்திருப்பதாக பேரவைத் தலைவர் கூறியது குறித்து...

CM Vijay

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Published On :1 நவம்பர் 2026, 1:16 pm IST

மக்களுக்காக ரூ. 1,000 கோடிக்குமேல் வருவாய் கிடைக்கிற தொழிலை விட்டுவிட்டு முதல்வர் வந்திருப்பதாக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் கூறியுள்ளார்.

சென்னை இன்று (நவ. 1) பெசன்ட் நகரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இளைஞரணி சார்பில் நடைபெற்ற போதை ஒழிப்பு இளைஞர் எழுச்சி மாரத்தானை சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் என். ஆனந்த், வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா, வேல்ஸ் குழுமத் தலைவர் ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் ஜேசிடி பிரபாகர் பேசியதாவது, "தமிழ்நாட்டில் ஒரு புதுயுகம் பிறந்திருக்கிறது. இவையெல்லாம் சாத்தியமா என மற்ற மாநிலங்கள் வியந்து கேள்வி எழுப்பும் ஓர் அறிவிப்பைத்தான் முதல்வர் வெளியிட்டார். ஊழலற்ற அரசை உருவாக்கிக் காட்டுவதாக அவர் சொன்னார். எங்கே சரிவு இருக்கிறது, அதனைச் சரிசெய்ய வேண்டும் என நாள்தோறும் முதல்வர் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

ரூ. 1,000 கோடிக்குமேல் வருவாய் கிடைக்கிற தொழிலை விட்டுவிட்டு, இனிவரும் காலங்களில் மக்களுக்காகச் செலவிடுவேன் என முதல்வர் வந்திருக்கிறார்.

போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதுதான் அவரின் முக்கிய நோக்கம். இந்த போதைப் பழக்கத்தில் எவ்வளவு குடும்பங்கள் இன்று சீரழிகின்றன. கணவர்மார்களை இழந்து எத்தனை பெண்கள் தவிக்கிறார்கள். எத்தனை குடும்பங்கள் நிர்கதியாகியுள்ளன.

இந்த அவல நிலைக்கெல்லாம் எங்கிருந்து ஆதரவு கிடைக்கிறது, எந்த இடத்தில் இவையெல்லாம் மலிவாக்கப்பட்டிருக்கிறது என்பதையெல்லாம் ஆராய்ந்து பல சீரிய திட்டங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.

Summary

CM Vijay has walked away from earnings of Rs. 1,000 crore to step forward for the sake of the people, JCD Prabhakar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.