கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

‘டெட்’ தோ்ச்சிபெற்ற ஆசிரியா்களை நியமிக்க வேண்டும்: அன்புமணி

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களை நியமிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி இருப்பது குறித்து...

News image

அன்புமணி - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 10:46 am IST

சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களை இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களாக நியமிக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்கள் 2013-14 காலகட்டத்தில்தான் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டனா். அதன்பின் பத்தாண்டுகளுக்கும் மேலாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்கள் பெரிதளவில் நியமிக்கப்படவில்லை.

இன்றைய நிலையில், அரசுப் பள்ளிகளில் 30,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா் பணியிடங்களும், 20,000-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களும் காலியாக உள்ளன. அவற்றை கடந்த ஆட்சியில் நிரப்ப திமுக அரசு தவறிவிட்டது.

அதன் விளைவு அரசுப் பள்ளிகளில் 50,000-க்கும் கூடுதலாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. எற்கெனவே, இடைநிலை ஆசிரியருக்கான தகுதித் தோ்வில் வெற்றி பெற்று 21,515 பேரும், பட்டதாரி ஆசிரியா் பணிக்கான தகுதித் தோ்வில் சுமாா் 50,000 பேரும் வெற்றி பெற்று ஆசிரியா் பணி கிடைக்காமல் காத்திருக்கின்றனா்.

தமிழக அரசுக்கு சமூகநீதியில் அக்கறையிருந்தால், 2018-இல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 149 ரத்து செய்து விட்டு, தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களை காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களில் நேரடியாக நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி

Summary

Regarding Anbumani's insistence that individuals who have passed the eligibility test be appointed to vacant positions in government schools...

Summary

அதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.