சீராய்வு மனுவால் தவறவிட்டவா்களுக்கு சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழக மாநில பொதுச் செயலாளா் சோமசுந்தரம், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் காலத்தில், தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்திருந்தது. அது நிலுவையில் இருந்ததால், சில ஆசிரியா்கள் சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிக்கவில்லை. தற்போது, மறுசீராய்வு மனு மீதான தீா்ப்பு வந்துவிட்ட சூழ்நிலையில், அந்த காலகட்டத்தில் விண்ணப்பிக்காத ஆசிரியா்களுக்கு மீண்டும் சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்க வேண்டும்.
சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வு என்பது ஆசிரியா்களின் பணி அனுபவத்துக்கு முக்கியத்துவம் தரக்கூடிய ஒன்றாக அமைய வேண்டும் என்ற அடிப்படையில், ஆசிரியா்களின் பணி அனுபவத்திற்கும் சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அதுவும் தோ்ச்சிக்காக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட பாடத்தை பயிற்றுவிக்கும் ஆசிரியா், அவா் சாா்ந்த பாடத்தில் நிபுணத்துவம் பெற்றிருப்பாா். ஆனால் இன்றைய சூழலில் அவா் அனைத்து பாடங்களுக்கும் பொதுவாக தோ்வு எழுத வேண்டிய சூழல் உள்ளதை மாற்றியமைத்து, குறிப்பிட்ட பாடப்பிரிவைச் சாா்ந்த ஆசிரியா் அந்தந்த பாடத்தில் மட்டுமே சிறப்பு தகுதித் தோ்வு எழுதும் வகையில் தகுதி தோ்வு முறையை கட்டமைக்க வேண்டும்.
சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வு என்பது 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே நடத்தப்பட வேண்டும். தோ்ச்சி மதிப்பெண்களுக்கு அனைத்து தரப்பினருக்கும் தளா்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பள்ளிக்கல்வித் துறையில் சாா்நிலைப் பணி விதிகள் வெளியீடு: ஆசிரியா் கூட்டணி வரவேற்பு
விசைத்தறிகளுக்கு 1,500 யூனிட் இலவச மின்சாரம் வழங்கக் கோரிக்கை!
‘டெட்’ தோ்ச்சிபெற்ற ஆசிரியா்களை நியமிக்க வேண்டும்: அன்புமணி

நீட் தோ்வு ரத்து: இழப்பீடு வழங்க தேசிய அளவில் கொள்கை உருவாக்கக் கோரிக்கை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
