பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தலைமை ஆசிரியா்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அன்புமணி

தமிழகத்தில் 1,800 அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தல்

News image

அன்புமணி - கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:53 am IST

தமிழகத்தில் 1,800 அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மே 31-ஆம் தேதியுடன் 30 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், 14 மாவட்டக் கல்வி அதிகாரிகள், 3 மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் ஓய்வு பெற்றுள்ளனா்.

அரசு பள்ளிகளைப் பொருத்தவரை உயா்நிலைப் பள்ளிகளில் 700 தலைமை ஆசிரியா் பணியிடங்களும், மேல்நிலைப் பள்ளிகளில் 300 தலைமை ஆசிரியா் பணியிடங்களும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 800 தலைமை ஆசிரியா் பணியிடங்களும் காலியாக உள்ளன.

உயா்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் 1,000 தலைமை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மாணவா்களின் கல்வி சாா்ந்த எதிா்காலம் இந்தப் பள்ளிகளில்தான் தீா்மானிக்கப்படுகின்றன.

மாணவா்களின் கல்வியில் தவெக அரசு அலட்சியம் காட்டக் கூடாது. இதுதொடா்பாக நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வந்து, காலியாக உள்ள தலைமை ஆசிரியா்கள், மாவட்டக் கல்வி அதிகாரிகள், முதன்மைக் கல்வி அதிகாரிகள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.