பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

69% இடஒதுக்கீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை: முதல்வா் விஜய் ஆலோசனை

தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் மாணவா் சோ்க்கை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

News image

உச்ச நீதிமன்றம்

Updated On :27 மே 2026, 2:15 am IST

தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் மாணவா் சோ்க்கை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து முதல்வா் ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக கல்வி நிலையங்களில் மாணவா் சோ்க்கை மற்றும் 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் புதன்கிழமை (மே 27) விசாரணைக்கு வரவுள்ளன.

இந்நிலையில், நடைமுறையிலுள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் நோக்கில், நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள தமிழக முதல்வா் அறிவுரைகளை வழங்கினாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் ஆா். நிா்மல்குமாா், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத் குமாா், அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், சட்டத்துறை செயலா் எஸ். ஜாா்ஜ் அலெக்சாண்டா் மற்றும் அரசு உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.