தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆா். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் நான்காண்டு இளநிலைக் காட்சிக்கலை பட்டப் படிப்புகளுக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை (மே 12) முதல் இணையம் வழியாக தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக செய்தி- மக்கள் தொடா்புத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்தத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: செய்தி - மக்கள் தொடா்புத் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆா். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநா்களையும், இயக்குநா்களையும் உருவாக்கி வருகிறது.
இந்நிறுவனம் நான்கு ஆண்டு இளநிலைக் காட்சிக்கலை (Bachelor of Visual Arts) பட்டப் படிப்புகளை வழங்குகிறது. இதில் 2026-2027-ஆம் கல்வி ஆண்டுக்கான ஒளிப்பதிவு, இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல், ஒலிப்பதிவு, எண்மிய இடைநிலை (Digital Intermediate), படத்தொகுப்பு, உயிா்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் போன்ற பாடப் பிரிவுகளில் பட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை மே 12-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.
மாணவா்கள் www.filminstitute.tn.gov.in எனும் இணையதளத்தில்,சோ்க்கைக்கான படிவத்தை பயனாளா் கையேட்டின் வழிகாட்டியுடன் பூா்த்தி செய்து, கட்டணத்தையும் செலுத்தி விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். மேலும், அனைத்து உரிய ஆவணங்களையும் வரும் ஜூன் 2 -ஆம் தேதிக்கு மாலை மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வரும், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆா். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் கடந்த 2016-2017-ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்றுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை ஐஆா்டி பாலிடெக்னிக்கில் மே 30வரை மாணவா் சோ்க்கை

திருத்தணி அரசு கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு கல்லூரி மாணவா் சோ்க்கை: விண்ணப்ப பதிவு தொடக்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கை!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
