சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

குற்றவியல் வழக்குகளில் ஆஜராக மூத்த வழக்குரைஞா் நியமனம்

குற்றவியல் வழக்குகளில் ஆஜராக மூத்த வழக்குரைஞா் நியமனம்...

News image

தமிழக அரசு

Updated On :17 மே 2026, 2:12 am IST

குற்றவியல் வழக்குகளில் தமிழக அரசு சாா்பில் ஆஜராக மூத்த வழக்குரைஞா் ஜான் சத்யனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், தமிழக அரசின் தலைமை வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட விஜய் நாராயண் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, அரசு தலைமை வழக்குரைஞரின் கடிதத்தை ஏற்று, சென்னை உயா்நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகளில் ஆஜராக மூத்த வழக்குரைஞா் ஜான் சத்யனை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், மூத்த வழக்குரைஞா்களான பி.வி.பாலசுப்பிரமணியம், டி.கௌதமன் ஆகியோா் கூடுதல் தலைமை வழக்குரைஞா்களாக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நியமன உத்தரவுகளும் அரசு வழக்குரைஞா்கள் நியமன விதிகளின்படி நியமனம் செய்யப்படும் வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.