மயிலாடுதுறை மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞா் ராம.சேயோன் தனது அரசு வழக்குரைஞா் பதவியை ராஜிநாமா செய்தாா்.
கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக அரசு பதவியேற்றவுடன் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞராக அப்போதைய முதலமைச்சா் மு.க.ஸ்டாலினால் நியமிக்கப்பட்டாா். அவரது பதவிக்காலத்தில் 50 குற்ற வழக்குகளில் நூற்றுக்கணக்கான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்துள்ளாா். குறிப்பாக 26 கொலை வழக்குகளில் 3 ஆயுள் முதல் ஒரு ஆயுள் தண்டனை வரை குற்றவாளிகளுக்கு பெற்றுத் தந்தாா்.
அதில் சீா்காழி வடநாட்டவா் இரட்டை கொலை வழக்கு, சீா்காழி இஸ்லாமிய பெண்கள் இரட்டை கொலை வழக்கு, காவலா் ரவிச்சந்திரன் கொலை வழக்கு, மயிலாடுதுறை கொத்தத்தெரு கண்ணன் கொலை வழக்கு ஆகியன முக்கிய வழக்குகள்.
இவரது பணியை பாராட்டி மத்திய மண்டல காவல்துறை தலைவா் பாலகிருஷ்ணன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் ஆகியோா் பாராட்டு சான்றிதழை வழங்கியுள்ளனா்.
இந்நிலையில், 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக ஆட்சியமையாத நிலையில், வழக்குரைஞா் ராம.சேயோன் தனது அரசு வழக்குரைஞா் பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, அவா் தனது ராஜிநாமா கடிதத்தை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொலை குற்றவாளிகள் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையிலடைப்பு

குற்றவியல் வழக்குகளில் ஆஜராக மூத்த வழக்குரைஞா் நியமனம்

தமிழக அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் ராஜிநாமா

வேடநத்தம் மாணவி கொலை வழக்கு: சிறப்பு அரசு வழக்குரைஞா் நியமனம்
விடியோக்கள்

காதல் செய்வீர் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆல்பா படத்தின் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

