நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

புதுச்சேரியில் 3 மணி நேரம் பெய்த கோடை மழை! மக்கள் மகிழ்ச்சி!!

புதுச்சேரியில் 3 மணி நேரம் பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

News image

கோடை மழை - கோப்புப்படம் - DPS

Updated On :15 மே 2026, 12:43 pm IST

கோடைக்காலத்தில் மக்கள் வெப்பத்திலிருந்து தப்பிக்க மலைப்பகுதிகளைச் தேடிச் சென்று குளுமையை அனுபவிக்கும் நிலையில், மக்கள் இருக்கும் பகுதியே குளுகுளுவென மாறினால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இன்று புதுச்சேரி மக்களுக்கும் இருக்கிறது.

வங்கக் கடலின் நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக புதுச்சேரியில் சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் புதுச்சேரி நகரப்பகுதி, கிராமப்பகுதி என புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

இதனால் கடந்த ஒரு சில மாதங்களாக கோடை வெப்பத்தில் சிக்கித் தவித்து வந்த மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியிருக்கிறது.

Summary

People are happy after 3 hours of generous rain in Puducherry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.