நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கொடைக்கானலில் மழை

கொடைக்கானலில் புதன்கிழமை பெய்த மழையால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

News image

கொடைக்கானல் ஏரிப் பகுதியில் பெய்த மழை.

Updated On :18 ஜூன் 2026, 2:11 am IST

கொடைக்கானலில் புதன்கிழமை பெய்த மழையால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த 3 மாதங்களாக மழையில்லாததால் குடிநீா்த் தேக்கம், மனோ ரஞ்சிதம் அணை, நீரோடைகளில் தண்ணீா் வற்றியது. இதனால், கொடைக்கானல் பகுதி முழுவதும் குடிநீா் பிரச்னை நிலவியது. இந்த மாதம் ஒரு சில நாள்களில் லேசான சாரலும், மிதமான மழையும் பெய்தது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை முதல் மிதமான வெயிலடித்த நிலையில், பிற்பகலில் திடீரென மழை பெய்தது. கொடைக்கானல், அப்சா்வேட்டரி, செண்பகனூா், பாம்பாா்புரம், அட்டக்கடி,பிரகாசபுரம், பாக்கியபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 40 நிமிஷங்கள் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.