சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் என அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
அதிமுகவின் சி.வி. சண்முகம் அணியினர் சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசினர்.
சி.வி. சண்முகத்தைத் தொடர்ந்து எஸ்.பி. வேலுமணி பேசுகையில்,
"அதிமுகவை உடைக்கிறோம் என்று கூறுகிறார்கள். அதிமுகவை உடைக்கும் எண்ணம் இல்லை. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சேர வேண்டும்.
2021, 2024, 2026 தேர்தல்களில் அதிமுக தோற்றிருக்கிறது. அந்த தோல்வியை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினோம். இபிஎஸ் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.
இபிஎஸ்ஸை முதல்வராக்கியது சசிகலாதான். அப்போது நாங்கள் எல்லாம் உடனிருந்தோம்.
செங்கோட்டையன், ஓபிஎஸ், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் என அனைவரையும் வெளியே அனுப்பினால் என்ன செய்வது? அவர்கள் எல்லாம் வெளியேறியபோதே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று கூறினோம்.
கட்சி நன்றாக இருக்க வேண்டும். பொதுச் செயலாளர் இபிஎஸ்தான். அதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்க வேண்டும். இனி யாரையும் குறை சொல்லி வெளியே அனுப்பக் கூடாது.
திமுகவை எதிர்த்துதான் கட்சி ஆரம்பித்துள்ளனர். கட்சியைப் பலப்படுத்த வேண்டும். எங்களுக்கு அவளவுதான் தேவை. அதிமுகவை உடைக்கும் நோக்கம் எங்களுக்கு கிடையாது" என்று கூறினார்.
Summary
Sasikala who made EPS the Chief Minister: Those who have split from the AIADMK must reunite: S.P. Velumani
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இ.பி.எஸ்.ஸுக்கு 22, சி.வி.எஸ்.ஸுக்கு 25! அதிமுகவில் அடுத்தது என்ன?

தவெகவுக்கு அதிமுக ஆதரவு! பதவிக்கு ஆசைப்படவில்லை! எஸ்.பி. வேலுமணி

தவெகவுக்கு ஆதரவா? சி.வி சண்முகம் - எஸ்.பி. வேலுமணி ஆலோசனை! | ADMK | TVK

தொண்டாமுத்தூரில் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

