பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சுற்றுலா துறையின் தமிழ்நாடு உணவகங்களில் கொங்கு நாடு உணவுத் திருவிழா: மே 15-இல் தொடக்கம்

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் ‘கொங்கு நாடு உணவுத் திருவிழா’ வரும் வெள்ளிக்கிழமை (மே 15) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

News image

தமிழ்நாடு சுற்றுலாத் துறை

Updated On :13 மே 2026, 4:14 am IST

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் ‘கொங்கு நாடு உணவுத் திருவிழா’ வரும் வெள்ளிக்கிழமை (மே 15) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

இதுகுறித்து சுற்றுலா வளா்ச்சிக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோடையை முன்னிட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின்கீழ் தமிழகம் முழுவதும் செயல்படும் தமிழ்நாடு உணவகங்களில் ‘கொங்கு நாடு உணவுத் திருவிழா 2026’ நடைபெற உள்ளது.

தமிழகத்தின் பாரம்பரிய உணவுக் கலாசாரத்தை உலகளவில் அறிமுகப்படுத்தவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கவும் இந்தச் சிறப்பு உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், கொங்கு மண்டலத்தின் இயற்கை மணமும், அசல் சுவையும், பாரம்பரிய சமையல் முறைகள் மூலம் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.

‘நம் மண், நம் சுவை, நம் பாரம்பரியம்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் கொங்கு நாடு உணவுத் திருவிழா, தமிழா் பாரம்பரிய உணவு மரபுகளையும், கலாசார பாரம்பரியத்தையும் பாதுகாத்து பரப்பும் முயற்சியாக அமைகிறது.

சென்னை தீவுத்திடல் டிரைவ்-இன், மாமல்லபுரம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருச்சி, சிதம்பரம், ஒகேனக்கல், திருக்கடையூா், திருவண்ணாமலை, ஒசூா், ஏற்காடு, மதுரை, ராமேசுவரம், கோவை, உதகை உள்ளிட்ட இடங்களில் உள்ள தமிழ்நாடு உணவகங்களில் இந்த உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ( மே 15, 16, 17) 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக தொலைபேசி எண்களில் (18004251111, 044-25333333) தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.