சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக வெற்றி பெற்ற தவெகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்திருக்கும் நிலையில், முதல்வராக விஜய் பதவியேற்பது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆளுநர் அழைப்பு விடுத்ததும், தவெக தலைவர் விஜய் தரப்பில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பதவியேற்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் உறுதி செய்யப்படவில்லை.
காரணம், தமிழக ஆளுநர் அர்லேகரை, தவெக தலைவர் விஜய் இன்று மாலை 5 மணிக்கு சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில், அவருக்கு நேரம் ஒதுக்கப்படாமல் இருந்தது. அர்லேகர் இன்று மாலை 7 மணிக்கு கேரளம் புறப்படுகிறார் என்றும் செய்திகள் வெளியாகின. அதற்கேற்ப, ஆளுநரை சந்திக்கப் புறப்பட்ட விஜய், ஆளுநர் மாளிகை செல்லாமல் வீடு திரும்பினார். ஆனால், விஜய் பட்டினப்பாக்கம் வீட்டுக்குள் செல்வதற்கு முன்பே, ஆளுநர் அர்லேகரின் கேரள பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
தமிழக ஆளுநரிடமிருந்து அழைப்பு வந்ததன்பேரில், மீண்டும் ஆளுநரை சந்திக்க தவெக தலைவர் விஜய் புறப்பட்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்று, ஆதரவு கடிதத்தை வழங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
அவ்வாறு தவெக தலைவர் விஜய், ஆளுநரை சந்தித்து பெரும்பான்மை உறுப்பினர்களின் கடிதத்தை அளித்ததும், அவரை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார். சட்டப்பேரவை பதவிக்காலம் மே 10ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், உடனடியாக ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பாரா? நாளையே பதவியேற்பு விழா நடைபெறுமா அல்லது திங்கள்கிழமை பதவியேற்க அழைப்பு விடுக்கப்படுமா என்பது எதிர்பார்ப்பில் உள்ளது.
பெரும்பாலும் திங்கள்கிழமையே தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் அவர் தனியாக பொறுப்பேற்றுக்கொள்வாரா? அமைச்சரவையும் பொறுப்பேற்றுக் கொள்ளுமா என்பதெல்லாம் நாளை தெரியவரலாம்.
Summary
The question has arisen as to when TVK leader Vijay will take oath as the Chief Minister of Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆளுநரைச் சந்தித்தபோது விஜய்யுடன் சென்ற இவர் யார்?

ஆளுநருடன் விஜய் இன்று சந்திப்பு?

விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

ஆளுநருடன் விஜய் சந்திப்பு! ஆட்சியமைக்க உரிமை கோரினார்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


