தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் சொன்னதும், அது உங்கள் கட்சிக்கான சுதந்திரம் என்று கூறியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
சென்னையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்திருப்பது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் கொடுத்தார்.
அப்போது அவரிடம், இந்த முடிவு குறித்து ஸ்டாலின் என்ன சொன்னார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் சொன்னோம். அதற்கு, அவர், அது உங்கள் கட்சிக்கான சுதந்திரம், நீங்கள் அப்படி முடிவெடுப்பதாக இருந்தால் வாழ்த்துகள் என்று எங்கள் நிலைப்பாட்டுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாகவும், ஏற்கனவே, தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைக்க இடையூறாக இருக்க மாட்டோம் என்று சொன்னார். அந்த பெருந்தன்மையான கருத்தை அவர் தொடர்ந்து சொல்லி வந்துள்ளார் என்றும் திருமாவளவன் விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பதவியேற்பதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தவெக சார்பில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பெற்றிருக்கும் நிலையில், விஜய்யை ஆளுநர் சந்திக்க மறுத்திருப்பதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன என்றும் கூறியுள்ளார்.
தவெக தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க விடுதலைச் சிறுத்தைகள் நிபந்தனையற்ற ஆதரவு அளித்திருக்கிறது. அதற்கான கடிதத்தையும் தொல். திருமாவளவன், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவிடம் வழங்கிய புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளன.
இதனால், தனிப்பெருங்கட்சியாக வெற்றி பெற்ற தவெக, தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெற்ற கட்சியாக ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரவிருந்தார். ஆனால், ஆளுநர் நேரம் ஒதுக்காததால், விஜய் மீண்டும் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்.
Summary
Thirumavalavan explained what Stalin said about the decision to support TVK.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்

விசிகவின் நேர்மை அண்ணன் ஸ்டாலினுக்கு தெரியும்! திருமாவளவன்

தவெகவுக்கு ஆதரவா? இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு: விசிக
தொலைபேசியில் அழைத்து ஆதரவு கேட்டார் விஜய்: திருமாவளவன்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


