தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

ஆளுநரைச் சந்தித்தபோது விஜய்யுடன் சென்ற இவர் யார்?

ஆளுநரைச் சந்தித்தபோது தவெக தலைவர் விஜய்யுடன் சென்ற நபர் குறித்து...

News image

தமிழக ஆளுநர் அர்லேக்கர் உடனான தவெக தலைவர் விஜய்யின் சந்திப்பில் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணன்... - எக்ஸ்

Updated On :8 மே 2026, 8:21 pm IST

தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரைச் சந்தித்த தவெக தலைவர் விஜய்யுடன் சென்றவர் யார் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது. இதையடுத்து, ஆட்சியமைக்க உரிமை கோரிய தவெக தலைவர் விஜய்யை 118 இடங்களைப் பெற்று பெரும்பான்மையை நிரூபிக்கக் கூறி தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேக்கர் 2 முறை திருப்பி அனுப்பினார்.

இந்த நிலையில், தவெக தலைமையில் ஆட்சியமைக்க காங்கிரஸ் (5), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (2), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2) மற்றும் விசிக (2) உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனால், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் குமார் உள்ளிட்ட தவெக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் சென்று ஆட்சி அமைக்க உரிமை கோரி தவெக தலைவர் விஜய் இன்று (மே 8) மாலை ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கரை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில், தவெக தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்ற நிலையில் விஜய் நடித்து வெளியாகாமல் தடுக்கப்பட்ட ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணன் சென்றது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

மேலும், தவெகவில் அடிப்படை உறுப்பினர் பதவிக்கூட வகிக்காத வெங்கட் நாராயணன் ஆளுநரின் அருகில் நிற்கவைக்கப்பட்டதன் பின்னணி என்னவென்று இணையவாசிகள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Summary

Venkat K. Narayanan, the producer of the film Jananayagan, accompanied TVK leader Vijay when the latter met the Governor of Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.