ஆட்சியமைக்க ஆதரவு அளித்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று நன்றி தெரிவிக்க உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.
நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் தவெக சார்பில் 233 பேர் போட்டியிட்ட நிலையில் 107 பேர் எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்டனர். விஜய் ஆட்சியமைக்க 118 பெரும்பான்மை தேவைப்படும் நிலையில் காங்கிரஸ்(5), சிபிஐ(2), சிபிஎம்(2) ஆதரவு அளித்துள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு வழங்கியதன் மூலம் தவெகவின் பலம் 116 எம்எல்ஏக்களாக உயர்ந்துள்ளது.
காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் எம்எல்ஏக்கள் 9 பேர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இன்னும் 2 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது. தவெகவுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரவு தெரிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன. இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அளித்த ஆதரவு கடிதத்தை தவெகவின் நிர்மல்குமார் நேரில் பெற்றுக்கொண்டார்.
மக்கள் வழங்கிய ஜனநாயக தீர்ப்புக்கு மதிப்பளித்து தவெக ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு வழங்குவதாக இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று நன்றி தெரிவிக்க உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கும் விஜய் சென்று நன்றி தெரிவிப்பார் என கூறப்படுகிறது.
Summary
It has been reported that TVK leader Vijay will personally visit the communist parties for their support and express his gratitude.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நடிகராக இருந்து நேரடியாக அரசியலுக்கு வரவில்லை! 1990 முதல் மக்கள் பணி! விஜய் பேச்சு

தவெகவுக்கு விசிக இன்னும் ஆதரவு அளிக்கவில்லை: தவெக தகவல்
மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகளுக்கு விஜய் நேரில் நன்றி

தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

