தவெக தலைவா் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநா் தாமதம் செய்தால் நீதிமன்றத்தை அணுகி சட்ட நிவாரணம் பெறப்படும் என மேலூா் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது விஜய் தலைமையிலான தவெக. இதையடுத்து, ஆளுநரை அணுகி ஆட்சி அமைக்க உரிமை கோரினாா். ஆனால், அறுதிப் பெரும்பான்மை இல்லாததால் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநா் இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. இது தொடா்பாக பல்வேறு கட்சிகளும் கருத்து தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து மேலூா் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பெ.விஸ்வநாதன் கூறியதாவது: முதலில் பெரும்பான்மை பலத்தை சட்டப்பேரவையில் நிரூபிக்க ஆளுநா் கோர வேண்டும். பெரும்பான்மை பலம் குறைவாக இருந்தால் அடுத்ததாக, தோ்தலுக்குப் பிந்தைய கூட்டணியின் பலத்தின் அடிப்படையில் நிரூபிக்க வேண்டும். இந்தச் சட்டத்தை மறந்துவிட்டு உள்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்பேரில் தமிழக ஆளுநா் தாமதம் செய்தால் நீதிமன்றத்தை அணுகி சட்ட நிவாரணம் பெறப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு!

தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவை அழைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் மனு
தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன?

நீதிமன்றத்தை அணுகுவோம்: ஆம் ஆத்மி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
