தமிழகத்தில் அரசியல் சூழலுக்கு மத்தியில் முக்கிய கட்சிகள் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் யாரும் எதிர்பாராத முடிவுகள் வெளியாகி, பரபரப்பான நிலையில், அடுத்த ஆட்சி அமைப்பது யார் என்ற கேள்வியும் பரபரப்பும் நிலவி வருகிறது.
தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவானபோதிலும், ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களைப் பெறவில்லை என ஆட்சியமைக்க தவெக தலைவர் விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்த நிலையில், மேலும் சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் பணிகளில் தவெக மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்திம் முக்கிய பெரும் கட்சிகள் இன்று (மே 8) ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துகின்றன.
நீலாங்கரையில் தவெக முக்கிய நிர்வாகிகளுடன் கட்சித் தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.
திமுகவின் அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
இதனிடையே, கூட்டணியில் சேருமாறு கோரிய தவெகவின் ஆதரவு கடிதம் தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைக் கட்சியினரும் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
மேலும், பாஜகவின் கமலாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
Summary
Consultative Meetings of Tamil Nadu's Major Parties Underway
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய உளவுத்துறை எச்சரிக்கை!

ஹாட்ரிக் வெற்றிக்கு தீவிரம் காட்டும் திமுக! சுழற்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் அமமுக

கே.கே. நகா் பகுதியில் அரசியல் கூட்டங்கள் நடத்தத் தடை கோரிய மனு தள்ளுபடி
கூட்டணிக் கட்சிகளின் வளா்ச்சியை முடக்குகிறது திமுக: ஆதவ் அா்ஜுனா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

